பயன் உள்ள தகவல்கள்

internet speed

நன்றி கம்ப்யூட்டர் மலர் 14.11.16

உலகின் அனைத்து நாடுகளும், அதிவேக இணைய இணைப்பினைக் கொடுக்கத் தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணித்து வரும் "ட்ராய்" அமைப்பு, அண்மையில் மிக மோசமான முடிவினை எடுத்துள்ளது. விநாடிக்கு 512 கிலோ பிட் வேக இணப்பினை "பிராட்பேண்ட் இணைப்பின் வேகமாக அறிவித்துள்ளது. இது கம்பி வழி இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துவோருக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்தியாவில், சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி, 1.73 கோடி பேர் கம்பி வழி இணைய இணைப்பினையும், 14.19 கோடி பேர் மொபைல் வழி இணைப்பினையும் கொண்டிருந்தினர். இந்திய இணைய் பயனாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாகவும், ஒவ்வொரு சேவையும் ஒரு வேகத்தைத் தருவதாகவும் குற்றம் சாட்டியதனால், ட்ராய், இது குறித்துக் கொள்கை முடிவெடுக்க முன்வந்தது. இணைய சேவை நிறுவங்களிடம் இருந்து பல்வகை தகவல்களை எழுத்து மூலமாக பெற்றது

internet speed

ஏர்டெல் நிறுவனம் 4.06 கோடி பேர் சந்த்தாரர்களையும், வோடபோன் 3.22 கோடி, ஐடியா செல்லுலர் 2.72 கோடி, பி.எஸ்.என்.எல் 2.06 கோடி ம்ற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 1.43 கோடி என இணையப் பயனாளர்களை அந்த தேதியில் கொண்டிருந்தன. கம்பி வழி இணையப் பயனாளர்களாக, பி.எஸ்.என்.எல். 98.8 லட்சம், பார்தி ஏர்டெல் 18.2 லட்சம், எம்.டி.என்.எல், 11 லட்சம்,ஏ.சி.டி 10 லட்சம் பேர்களை க்கொண்டிருந்தன.

குறைந்த பட்சமாகத் தரப்பட வெண்டிய இணைய இணைப்பு வேகம் குறித்து, பல வகை நிலைகளில் சந்திப்புகளை ஏற்படுத்தி, கலந்து ஆய்வு செய்த பின்னர், ட்ராய் இந்த முடிவினை எடுத்து, இந்திய இணைய பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளது. "தனி ஒரு சந்தாதாரருக்கு, குறைந்தபட்சம் 512kbps வேகத்தில் தரவிறக்க வேகத்தைக் கொடுத்தால் அது "பிராட்பேண்ட்" எனக் கருத்டப்படும்" என அறிவித்துள்ளது.

internet speed

மிகச் சிறிய தென் கொரியா நாட்டில், அந்நாட்டு குடிமக்களுக்கு 29mbps இணைய வேகமே சராசரி வேகமாக உள்ளது. இது நார்வே நாட்டில் 21.3 mbps ; செக் குடியரசில் 17.8 mbps, இந்தியாவில் சராசர் இணைய வேகம் 2.5mbps. இது ஸ்ரீலன்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் உள்ள சராசரி வேகத்தைக் காட்டிலும் குறைவாகும். ஆசிய பசிபிக் நாடுகளிலேயே, இந்தியாவில்தான் குடிமக்கள் பெறும் இணைய சராசரி வேகம் மிகக் குறைவாக உள்ளது.

இப்படி இருக்கும்போது எப்படி "டிஜிட்டல் இந்தியா" வெற்றிபெறும் என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வாருங்கள் என்று மத்திய அரசு கூவி கூவி அழைப்பது, இப்படிப்பட்ட இணையவேகத்தினை வைத்துக்கொண்டு எவ்வாறு வெற்றி பெறும் என்பது வெறும் வாய்ஜாலமே..

Keywords

Internet Speed, Data speed, TRAI, 512kbps

Categories