இன்றைய உலகில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரும் செல்போனில்தான் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு தகவல் தேவையெனில் உடனே செல்போனில் இணையத்தை உபயோகித்து ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டு நம் இராஜபாளையம் நகரில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக இருக்க நம் ஊரில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்களின் தகவல்கள் வகை வகையாக தொகுத்து www.rajapalayaminfo.com எனும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். இந்த இணையதளம் அனைத்துவிதமான கம்ப்யூட்டர், செல்போன்களிலும் தெளிவாக தெரியும்படியும், உபயோகிக்கும்படியும் பிரத்யேகமாக வடிவமைத்து உருவாக்கி உள்ளோம்.
இந்த இணையதளத்தினை எவ்வாறு, எப்படி பயன்படுத்துவது என்பதனை இங்கு பார்ப்போம்.
இந்த இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்தின் இறுதியில் உள்ள Categories List செல்லுங்கள். அதில் உங்களுக்கு தேவையான வியாபார / சேவை வகையில் ஒரு க்ளிக் செய்யுங்கள். தகவல்கள் வரிசையாக காட்சியளிக்கும்
( அல்லது )
முகப்பு பக்கத்தில் Search Box எனும் கட்டத்தில் நமக்கு தேவையான தகவல்களை தட்டச்சு செய்து லென்ஸ் போல் இருக்கும் வடிவத்தை க்ளிக் செய்து 5 வினாடிகள் பொருத்திருந்து பார்த்தால் பெட்டிக்கு கீழே தகவல்கள் வரிசையாக காட்சியளிக்கும். உதாரணம், நமக்கு நம் ஊரில் உள்ள Auto Consultants தகவல் தேவையென்றால் Search Box ல் A என்று தட்டச்சு செய்து 5 வினாடிகள் பொருத்திருந்து பார்த்தால் A எழுத்தில் ஆரம்பிக்கும் வியாபாரங்கள் (Advocates, Agencies, Air Tickets, Ambulance..........Auto Consultants) list காட்சியளிக்கும். அப்படி A தட்டச்சு செய்தவுடன் U அடித்தால் Auditors, Auto Agencies, Auto Consutants, Auto Spares, Auto Works என்று வரிசையாக வியாபார / சேவை நிறுவனங்களின் வகைகள் காட்சியளிக்கும். அப்படியே ஒவ்வொரு எழுத்துக்கும் 2 அல்லது மூன்று வினாடி இடைவெளி விட்டு டைப் செய்து நமக்கு தேவையான வார்த்தை வந்தால் அதனை தேர்வு செய்து பெட்டியில் வலதுபக்கம் லென்ஸ் போல் இருக்கும் வடிவத்தை க்ளிக் செய்தால் உடனே அந்த வகையில் உள்ள வியாபார நிறுவனங்களின் பட்டியல் காட்சியளிக்கும். இதில் சின்னத்திரை செல்போனில் கீபோர்டு பெரிதளவில் திரையை மறைத்து இருக்கும். search box ல் தட்டச்சு செய்தவுடன் செல்போனில் back பட்டனை டேப் செய்து பார்த்தால் search box ல் list தெரியும் அதனை பயன்படுத்தி தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்